யாழ். கொட்டடியில் இளைஞன் மீது வாள் வெட்டு

knife2bwith2bblood-11கொட்டடியில் இளைஞன் ஒருவன்மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில், குறித்த இளைஞனின் இடது கையும் காலும் பாதிக்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது…

இறால் வலை திருட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபரென கருதப்படும் மேற்படி இளைஞன், நேற்று காலை நீதிமன்றினால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மற்றைய குழுவினர் ஒன்றுசேர்ந்து குறித்த இளைஞனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இச்சம்பவத்திலேயே அவ்விளைஞனின் இடது கையும் காலும் பாரிய வெட்டுக்காயத்திற்குள்ளாகியுள்ளதாக அறிய முடிகிறது.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.