யாழ்.காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி யமுனாநந்தாவின் வாகன விபத்து!

யாழ்.காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரிவைத்தியக் கலாநிதி யமுனாநந்தா பயணித்த வாகனம் விபத்திற்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.நேற்று வைத்தியர் தனது வாகனம் பழுதடைந்த நிலையில் பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தின் மற்றொரு வாகனத்தில் பயணித்துள்ளார்.இந்நிலையில் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அந்த வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்துடன் மோதி விபத்திற்குள்ளானது.

இதில் வைத்தியரின் இரண்டு கால்களும் முறிவடைந்த நிலையில் வாகனத்தின் சேதமடைந்த பாகங்கள் வெட்டுப்பட்டே வைத்தியரை மீட்டுள்ளனர்.எனினும் சாரதிக்கு எதுவிதமான காயங்களும் ஏற்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் வைத்தியர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் குறித்த விபத்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சர்ச்சைக்குரிய சந்தேகம் யாழ்.மாவட்டத்திலுள்ள தமிழ் தேசிய ஆதரவாளர்கள் மட்டத்தில் எழுந்துள்ளது.

சம்பவத்தின்போது வைத்தியர் பயணித்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை மீறும் வகையிலேயே சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts