யாழ்.உடுப்பிட்டி மாணவன் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம்

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் க.பொ.த உயர்தரப் பரீட்சையில், கணிதப் பிரிவில் தோற்றி  அகில இலங்கை  ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.நேற்றுக் காலை 10 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட ஜி.சீ.ஈ உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு 11 மணிக்கே வெளியாகியது.கொழும்பு மாவட்டத்தில் காலை வெளியாகும் பெறுபேற்றினை மாலை 3 மணிக்கு பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும், நள்ளிரவு நெருங்கிய சமயத்திலேயே பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

பெறுபேறுகளில் அடிப்படையில் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியைச் சேர்ந்த கமலக்கண்ணன் கமலவாசன் என்ற மாணவன் 3 ‘ஏ’ (3.1167 இஸற் புள்ளிகள்) சித்திகளைப் பெற்று, கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.