யாழ். அரச அதிபருடன் சுரேஷ் எம்.பி. சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ந.வேதநாயகனுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை செயலகத்தில் நடைபெற்றது.

suresh and GA meet vethanayagam

இந்தத் சந்திப்பின் போது தற்போது அரசாங்கத்தால் வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட ஆயிரத்து 100 ஏக்கர் காணிகளில் இராணுவத்தின் நான்கு பாரிய முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது குறித்து சுரேஷ் எம்.பியால் அரச அதிபருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் குறித்த இராணுவ முகாம்கள் தொடர்ந்தும் இருக்குமானால் அந்தப் பகுதியில் மக்கள் மீளக்குடியேற முடியாத நிலை ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதே வேளை – தற்போது விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் மீள் குடியேற்றத்துக்குத் தேவையான குடிதண்ணீர், போக்குவரத்து, மலசலகூட வசதிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை விரைவாக மேற்கொள்ளுமாறும் அத்துடன் சங்கரத்தைப் பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் விநியோகிப்பதற்காக அந்தப் பகுதியில் தற்காலிக குடிதண்ணீர்த் தாங்கிகளை வைக்குமாறும் சுரேஷ் பிரேமச்சந்திரனால் அரச அதிபரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட அரச அதிபர் தாம் மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுப்பார் என உறுதியளித்துள்ளார்.

Related Posts