யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புலிச் செயற்பாடுகள்?: திவயின செய்தி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.புலனாய்வுப்பிரிவினர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆனந்தகுமாரசுவாமி மற்றும் பாலசிங்கம் விடுதிகளில் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விடுதிகளை பரிசோதனை செய்த போது அதனை தடுக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், புலிளின் இணைய தளங்களுக்கு தகவல்களை வழங்கிவரும் தரப்பினரும் இவ்வாறு விடுதிகளை சோதனையிட தடை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த அனைத்து தகவல்களையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கணனி வலையமைப்பின் ஊடாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.