யாழ்ப்பாணத்தில் கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.யாழ்ப்பாண சிறைச்சாலையில் சில கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போதைப் பொருள் விற்பனை மற்றும் போதைப் பொருள் பயன்பாடு தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 பேர், கடந்த 19ம் திகதி முதல் உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.
தங்களுக்கு கூடிய விரைவில் பிணை வழங்குமாறு கோரி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு நீதிமன்றம் பிணை வழங்கத் தாமதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், நேற்று மாலை முதல் இந்தக் கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.