யாழ்,ஆஸி அணிகளின் கிரிக்கெட் மோதல் இன்று

இலங்கை கிரிக்கெட்டில் பல முரளிதரன்கள் உருவாக்கும் நோக்கில் இன்று ஆஸி.இளைஞர் அணியுடன்
யாழ்.மாவட்ட கிரிக்கெட் அணியினர் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இன்று மோதுகின்றன.

aust-cricket-2

யாழ்.மாவட்டக் கிரிக்கெட் தெரிவு அணிக்கும்,ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து வருகை தந்துள்ள இளைஞர்
கிரிக்கெட் அணிக்கும் இடையேயான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகின்றது.

aust-cricket

இந்த போட்டியினை இராணுவத் தலைமையகம் மற்றும் யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தலைமையகம்
ஆகியன இணைந்து ஏற்பாடு செய்தது.

மேலும் இந்நிகழ்வுக்கு யாழ்.மாவட்ட படைகளின் இரண்டாம் நிலைக் கட்டளை அதிகாரி பிரசாத் சமரசிங்க,
யாழ்.மாவட்ட படைத் தளபதி உதயபெரேரா,யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,யாழ்.மாநகர
முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா,புனித பத்திரிசிரியார் கல்லூரி அதிபர் ஜெறோம் செல்வநாயகம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.