யாழில் 9 மணித்தியால மின்வெட்டு

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றவேண்டியிருப்பதாலும் புதிய உயர் அழுத்த மின் மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காகவும் யாழில் 9 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனடிப்படையில், இன்று சனிக்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரை பிறவுன் வீதி, கஸ்தூரியார் வீதி, கன்னாதிட்டி, மாவடி, தட்டார்தெரு தொடக்கம் முட்டாஸ்கடைச் சந்தி வரையான பிரதேசம், திருநெல்வேலிப் பிரதேசம், பரமேஸ்வரா சந்தி, கந்தர்மடம், ஆரியகுளம், ஸ்ரான்லி வீதி, வேம்படி, குருநகர், பாசையூர், கொட்டடி, நாவாந்துறை, மீனாட்சிபுரம், பண்னைப் பிரதேசம், மனோகரா பிரதேசம், யாழ்.மாநகர சபை பிரதேசம், யாழ். நகரம் முழுவதும், வல்லிபுரப் பிரதேசம், புனிதநகர், கற்கோவளம், உபயகதிர்காமம், நெல்லண்டைப் பிரதேசம், பளை, மிருசுவில், எழுதுமட்டுவாள், கொடிகாமம், உசன், மந்துவில், வரணி, மீசாலை, புத்தூர் சந்தி, சாவகச்சேரி பிரதேசம், மட்டுவில், பாலாவி, வெல்லம்பொக்கட்டி, கைதடி, மறவன்புலோ, நாவற்குழி, கோகிலாக்கண்டி ஆகிய இடங்களிலும்;

நாளை ஞாயிற்றுக்கிழமை கோண்டாவில், உரும்பிராய், மருத்துவபீடப் பிரதேசம், பலாலி வீதி, கந்தர்மடம், யாழ்.மாநகர சபை பிரதேசம், யாழ்.நகரம் முழுவதும், பிறவுண் வீதி, கஸ்தூரியார் வீதி, கன்னாதிட்டி, தட்டார்தெரு தொடக்கம் முட்டாஸ்கடைச் சந்தி வரையான பிரதேசம், திருநெல்வேலிப் பிரதேசம், பரமேஸ்வரா சந்தி, ஆரியகுளம், ஸ்ரான்லி வீதி, வேம்படி, குருநகர், பாசையூர், கொட்டடி, நாவாந்துறை, மீனாட்சிபுரம், பண்னைப் பிரதேசம், மனோகரா பிரதேசம், கந்தரோடை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, இளவாலை, சங்கானை, மாதகல், வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், காரைநகர் பிரதேசம், தீவகப் பிரதேசம், அராலி, மந்திகை, கிராமக்கோடு, தம்பசிட்டி, ஓரம் கட்டை சந்தி, சாரையடி, புலோலி, பருத்தித்துறை நகரப் பிரதேசம் ஆகிய இடங்களிலும்

எதிர்வரும் திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை மாவடிப் பிரதேசம், மூளாய் பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Related Posts