யாழில் 30 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக திரைக்கு வருகிறது சிங்களத் திரைப்படம்

யாழ்ப்பாணத்தில் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக  சிங்களத் திரைப்படம் ஒன்று இம் மாதம் வெளியிடப்படவுள்ளது.

எதிர்வரும் 20ம் திகதி யாழ் நகரில் உள்ள ராஜா திரையரங்கில் ”சிகி நயடிகே  என்ன” என்ற சிங்களத்திரைப்படம்  தமிழ் உபதலைப்புகளுடன் திரையிடப்படவுள்ளது. 30 ஆண்டுகளுக்கு  முன்னர் இன மோதல்கள்  தீவிரமடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தில்  சிங்கள திரைப்படங்கள் வெளியிடப்படவி்ல்லை. முதல் முறையாக சிங்களத் திரைப்படத்தை வெளியிட இலங்கையின் திரைப்படக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

 

 

Recommended For You

About the Author: Editor