யாழ்,நகர் பகுதியில், பௌத்த பிக்குகள் சிலர் வீடுகளிற்கும், வர்த்தக நிலையங்களிற்கும் சென்று நிதி சேமிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.இதன்படி நேற்றையதினம், யாழ். கஸ்தூரியார் வீதி பகுதியில் முச்சக்கரவண்டி மூலம் நிதி சேமிப்பில் ஈடுபட்டு வந்த பிக்குகள் பார்ப்பதற்கு சந்தேகத்துக்கிடமான விதத்தில் காணப்பட்டதாக சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.மேலும்,விகாரைகளில் தங்கியுள்ள ஏழைச் சிறுவர்களின் நலனுக்காக இவ்வாறு நிதி சேமிப்பில் தாம் ஈடுபடுவதாக குறித்த பிக்குகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், தழிழர் வாழும் பிரதேசங்களில் காணப்படுகின்ற இந்துக்கோவில்கள் சிதைக்கப்பட்டு, பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதற்கு பெரும்பாலும் பௌத்த பிக்குகளே ஆதரவளித்து வருவதாகவும், இந்த வகையில் இவ்வாறு தமிழர் பிரதேசங்களில் நிதி உதவி கோருவது எவ்வகையில் நியாயமென பொது மக்கள் சிலரால் கேள்வியெழுப்பியுள்ளனர்.
அண்மைக்காலமாக, தென்னிலங்கையிலிருந்து, பெருமளவிலான பௌத்த பிக்குகள் யாழிற்கு வருகை தருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் பௌத்த பிக்குகளின் சீருடை தரித்த சிலர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.