யாழில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இராணுவத்தால் கறவைப் பசுக்கள் கையளிப்பு

யாழ்ப்பாணத்தல் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் கறவைப் பசுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 511ஆவது படைப்பிரிவினால் இந்த பசுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

வடக்கில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இந்த கறவைப் பசுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக, அச்செழு கிராமத்தைச் சேர்ந்த 6 குடும்பங்களுக்கு இந்த பசுக்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2013_01_28_03

2013_01_28_05