யாழில் வடமாகாண உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகள் குறித்து முதலமைச்சருடன் கலந்துரையாடல்

vicky0vickneswaranவடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களினால் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நேற்று காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

யாழ்.பொது நூலகத்தில் அமைந்துள்ள மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போது மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் மாகாணத்தின் துறைசார் அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் மற்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.