யாழில் முதலாவது சமிக்ஞை விளக்கு

Traffic-Light-Signalயாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியையும் ஆஸ்பத்திரி வீதியினையும் இணைக்கும் முத்திரைச் சந்திப் பகுதியிலே இந்த முதலாவது வீதிச்சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்களினால் யாழ் நகரின் முக்கிய சந்திகளில் பயணிக்கும் வாகனங்கள் எண்ணிக்கைகள் கணக்கெடுக்கப்பட்டதினைத் தொடர்ந்து முத்திரைச் சந்தியில் வீதிச்சமிஞ்ஞை விளக்குகள் நேற்று முன்தினம் மாலை பொருத்தப்பட்டுள்ளன.

யாழ்.நகரத்திற்குள் இருந்தும் ஏ – 9 வீதிக்கு செல்லும் வாகனங்கள், வெளியிடங்களிலிருந்து யாழ்.நகரத்திற்கு நுழையும் வாகனங்கள் முத்திரைச் சந்தியினூடகவே பயணிப்பது குறிப்பிடத்தக்கது.