யாழில் மாவீரர் தின துண்டுப்பிரசுரங்கள்

யாழ். கோண்டாவில் கிழக்கு பகுதியிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. மாவீரர் தினம் 2012 என்று எழுதப்பட்டு, மாவீரர் புகைப்படங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இனந்தெரியாத நபர்களினால் நேற்று இரவு ஒட்டப்பட்டிருந்ததாகவும், இத்துண்டு பிரசுரங்களை பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து அகற்றி வருவதாகவும், அம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.