Ad Widget

யாழில் பண மோசடி செய்த இந்திய பிரஜைக்கு வலைவீச்சு

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த 8 பேரிடம் 38 இலட்சம் ரூபாய் பண மோசடி செய்த நபரை காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தேடி வருவதாக பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நபர்களை இந்தியாவுக்கு அனுப்புவதாகவும் வெளிநாடுகளுக்கு செல்லவிரும்புவேரை அந்தந்த நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி இந்திய பிரஜையொருவர், 8 பேரிடம் இருந்து 38 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.

இதற்கு இடைத்தரகராக பருத்தித்துறை 1ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த நபரொருவர் ஈடுபட்டுள்ளார். பணத்தினை பெற்றுக்கொண்டவர் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி காலத்தை இழுத்தடித்து வந்துள்ளார்.

தாம் ஏமாற்றப்படுவதை உணர்ந்து கொண்ட இடைத்தரகராக செயற்பட்டவர் பணத்தைக் கேட்டுள்ளார். எனினும், பணம் மீண்டும் கிடைக்காததால் இடைத்தரகராக நின்று பணத்தினை வாங்கி கொடுத்தவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவில் கடந்த 04ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றிய நபர் தொடர்பான தகவல்களை பொலிஸார் இந்திய தூதரகம் ஊடாக பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அவரைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts