யாழில் பட்டப் பகலில் வீடுடைத்து நகை, பணம் கொள்ளை

Theft_Plane_Sympol-robberyபூட்டியிருந்த வீட்டின் யன்னல் கம்பிகளை கழற்றி, பகல் வேளையில் வீட்டினுள் புகுந்த திருடர்கள் சுமார் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று பகல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உடுவில் அம்பலவாணர் வீதியில் அமைந்துள்ள வீட்டில் யன்னலை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் உள்ள அலுமாரிகள் அனைத்தையும் உடைத்து சோதனையிட்டு வீட்டில் இருந்து சங்கிலி, காப்பு, பிள்ளைகளின் மோதிரங்கள், காதுத் தோடுகள் மற்றும் பணம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளார்கள்.

கணவனும் மனைவியும் அரச அலுவலகர்கள் என்ற வகையால் தமது வேலைக்குச் சென்றதை சாதகமாக பயன்படுத்தி இந்த திருட்டு இடம் பெற்றுள்ளது.

மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த மனைவி வீட்டின் கதவை திறந்து உட்சென்ற வேளையில் வீட்டினுள் இருந்த திருடன் மதில் பாய்ந்து தப்பி ஓடியுள்ளான்.

ஏற்கனவே வீட்டுக்கு வெளியே சைக்கிளில் காத்திருந்த ஒருவரை வீதியால் வந்த பொது மகன் ஏன் நிற்கிறாய் என்று கேட்டதும் குறிப்பிட்ட நபர் அந்தப் பகுதியில் உள்ள ஒருவரின் பெயரை சொல்லிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

Recommended For You

About the Author: Editor