யாழில் நவநீதம்பிள்ளை: வடமாகாண ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபருடன் இன்று சந்திப்பு

Navaneetham-pillai-tamilmirrarஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நேற்றய தினம் யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.

விசேட விமானம் மூலமாக நேற்று இரவு7.00 மணியளவில் யாழ். வருகை தந்த ஆணையாளர் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதியையும் பார்வையிட்டார்.

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பவானி பசுபதிராஜாவுடன் போதனா வைத்திய அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடி இருந்தார்

இன்று காலை வடமாகாண ஆளுநர் G.A. சந்திரசிறி மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோருடனான சந்திப்பு நடைபெறவுள்ளது