யாழில் கலாசார சீரழிவை ஏற்படுத்துபவர்கள் தொடர்பில் முறையிட பொலிஸ் நிலையத்தில் தனியான பிரிவு

policeயாழில் கலாசார சீரழிவை ஏற்படுத்துபவர்கள் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடுவதற்கு என தனியான பிரிவு ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி சமன்சிகேரா தெரிவித்துள்ளார்.

யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களில் பல பகுதிகளில் கலாசார சீரழிவை ஏற்படுத்தும் விதமான செயற்பாடுகள் நடைபெற்று வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இதனால் இவற்றைத் தடுப்பதற்கும் யாழ்ப்பாண பாரம்பரிய கலாசாரத்தைக் கட்டிக் காப்பதற்காக இந்தப் பிரிவு இயங்கவுள்ளது.

தனியார் விடுதிகளில் 18 வயதுக்கு குறைந்தவர்களை அனுமதித்தல்,அனுமதியில்லாமல் இயங்கும் விடுதிகளை மூடுதல்,
அனுமதிப்பத்திரமின்றி இயங்கும் மதுக்கடைகளை மூடுதல்,பாடசாலைகளுக்கு அருகில் நின்று பாடசாலை மாணவர்களுக்கு சேட்டை விடுவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

யாழின் கலாசாரத்திற்கு பங்கம் விளைவிப்பவர்கள் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.