யாழில் இளைஞர் மாநாடு

tellippalaiயாழ். மாவட்டத்தில் இளைஞர்களின் தேவைகள் குறித்து ஆராயும் நோக்கில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் ‘இளைஞர் மாநாடு’ ஒன்று எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறுவுள்ளதாக இளைஞர் சேவை மன்றத்தின் யாழ் மாவட்ட பிரதி இணைப்பாளர் ஈஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.

இளைஞர் சேவை மன்றத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சேவை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்கிழமை இளைஞர் சேவை மன்றத்தின் யாழ் அலவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 30 வருட யுத்தத்திற்குப் பின்னர் கடந்த வருடம் நடைபெற்ற தேசிய இளைஞர் விளையாட்டுப்போட்டில் எமது வீரர்கள் கலந்துகொண்டு பல தங்கப்பதக்கங்களையும் வெள்ளிப்பதக்கங்களையும் பெற்றுள்ளமை ஒரு சாதனையாக அமைந்துள்ளது.

எமது மாவட்டத்தில் சிறந்த திறமையான வீரர்கள் இருக்கின்றார்கள் அவர்களை இனங்கண்டு அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவதன் மூலம் நாடடில் இவர்களை சிறந்த வீரர்களாக உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

ஆத்துடன் இளைஞர்களின் திறன்களை விருத்தி செய்யும் நொக்கில் 30 மில்லியன் ரூபா செலவில் 15 பிரதேச செயலகத்தில் உள்ள 350ற்கும் மேற்பட்ட கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆத்துடன் யாழ் மாவட்டத்தில் உள்ள குளங்கள் புனரமைப்பு,சிறுவீதிகள்,விளையாட்டு மைதானங்கள் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகவும் இதற்காக 76 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தப்பணிகளை முன்னெடுப்பதற்கு 120 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் மூனறு நாள் பயிற்சி பட்டறை ஒன்றும் வழங்கப்படவுள்ளது. அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 350 ரூபா வீதம் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் யாழ் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில் எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் இளைஞர் மாநாடு ஒன்று நடாத்த தீர்மானதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.