Ad Widget

யாழில் இலஞ்ச ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வூட்டும் நிகழ்வு

சர்வதேச இலஞ்ச ஊழலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு தேசிய இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வொன்று நேற்று (04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

lanjam-05122015-event

தேசிய இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியன பொலிசாருடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு நேற்று காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இதன்போது இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டதுடன் இலஞ்ச ஊழலுக்கு எதிரான சுவரொட்டிகள் போன்றவை பேருந்துகள் மற்றும் வாகனங்களில் ஒட்டப்பட்டது.

நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள இந்த விழிப்புணர்வு நிகழ்வானது யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து மாத்தறை வரை ஒவ்வொரு மாவட்டங்களிலும் இடம்பெறும் என இங்கு கருத்து தெரிவித்த இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் தெரிவித்தார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் டில் ருக்சி டயஸ் விக்ரமசிங்க, மற்றும் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Posts