யாழில் ஆசிரியர்களை இலக்கு வைத்து கூட்டம் நடாத்த ஒரு அரசியல் கட்சி திட்டம்

paffrel-electionமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 30 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தங்களிடம் பதிவாகியுள்ளதென பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பபணத்தில் ஆசிரியர்களை இலக்கு வைத்து ஒரு அரசியல் கட்சி இன்று கூட்டம் ஒன்றை நடாத்த ஏற்பாடுகள் செய்துள்ளதாக தெரியவந்துள்ளதென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.