யாழில் அரச பொருட்களை விற்க சென்ற மூவர் கைது

arrest_1அரசிற்கு சொந்தமான பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ய கொண்டு சென்ற மூவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால், லொறி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, ஒருதொகை பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.

டி 56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பாவிக்கப்படும் ரவைகள், 120 மில்லி மீற்றர் துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பல பொருட்கள் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவத்தில் கைதான சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.