யாழிற்கான ரயில்சேவையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

யாழ்ப்பாணத்துக்கான ரயில் போக்குவரத்து சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

mail train

தற்போதைய நிலையில் நாளாந்தம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நான்கு ரயில் சேவைகளும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு நான்கு ரயில் சேவைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

எனினும் யாழ்தேவி ரயில் பயணிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது. தற்போதைய நிலையில் எதிர்வரும் நாட்களில் ரயிலில் பயணம் செய்ய சுமார் 41 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இலங்கையில் சேவையில் ஈடுபடும் ரயிலொன்றில் பயணம் செய்வதற்கு செய்யப்பட்டுள்ள ஆகக் கூடுதலான முன்பதிவு இதுவாகும். எனினும் அவர்களில் 17 ஆயிரம் பேருக்கு மட்டுமே இம்மாதத்தினுள் ரயில் போக்குவரத்துக்கான வாய்ப்பு கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக ரயில் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனை போக்கும் வகையில் மேலதிகமாக இன்னும் நான்கு ரயில் சேவைகள் வரையில் போக்குவரத்தில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் உத்தேசித்துள்ளது. மேலும் தற்போது போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் ரயில்களில் மேலதிக பெட்டிகளை இணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.