மோட்டார் வாகனச் சட்டத்தினை மீறுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

judgement_court_pinaiயாழ்.மாவட்டத்தில் மோட்டார் வாகனச் சட்டத்திற்கு முரணான விதத்தில் செயற்படுபவர்களுக்கு எதிராக இன்றிலிருந்து உடனடியாக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தார்.

யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொலிஸ் தலைமையகத்தில்இன்று வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகியவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

மோட்டார் வாகனச் சட்டத்திற்குப் புறம்பான விதத்தில் நடந்து வந்தவர்களுக்கு இதுவரை காலமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் கால அவகாசமும் வழங்கப்பட்டு வந்தன.

எனினும், இன்று வெள்ளிக்கிழமை (11) முதல் அவ்வாறான மன்னிப்பு வழங்கும் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறாதெனவும், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.