முறிகண்டியில் விபரீதம் ; தவறி விழுந்து நடத்துநர் சாவு

பேருந்தில் இருந்து தவறி விழுந்த நடத்துனர் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

murikandy-acc

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேரூந்திலேயே இன்று முற்பகல் 11.45 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த இளைஞன் வவுனியா கோவில் புளியங்குளம் பகுதியச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.