முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் நாடுகடத்தப்பட்டார்!

போலிக்கடவுச்சீட்டின்மூலம் ஜேர்மனிக்குச் செல்லவிருந்த சுப்பையா சுதன் எனும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் பூனே விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டதையடுத்து, சிறீலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டார்.

கடந்த 1ஆம் திகதி லொஹேகான் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சுதன் சுப்பையா, விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினராகச் செயற்பட்டவர் எனத் தெரியவந்துள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆலங்கொட்டல் என்ற இடத்தைச் சேர்ந்த மாரிமுத்து ராஜு என்பவரின் கடவுச்சீட்டில் தனது ஒளிப்படத்தை ஒட்டி ஜேர்மனிக்குச் செல்லமுயன்றபோது, இந்தியாவின் உள்ளக புலனாய்வுப்பிரிவினரால் இவர் கைதுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து, விமான நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபர், திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என சிறீலங்காத் தூதரகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவருக்கு தற்காலிக கடவுச்சீட்டும் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து, இவர் நேற்றையதினம் அதிகாலை 3.10 மணியளவில் நாடுகடத்தப்பட்டார் என இந்தியக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor