முன்னாள் போராளி ஒருவர் கைதாகி விடுதலை?

யாழ்ப்பாணம், சித்தங்கேணிப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு அவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

முன்னர் ஒருதடவை குறித்த முன்னாள் போராளி விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார் என்றும் அதன்போது அவர் சமுகமளிக்காத காரணத்தினாலேயே நேற்று கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்றும் மற்றுமொரு தகவல் தெரிவித்தது.

இதுகுறித்து கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் என்று கூறப்படும் முன்னாள் போராளியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது “தன்னை யாரும் கைது செய்யவில்லை. தனது குடும்பத்துக்கு உதவி செய்வதற்காகவே தான் அழைக்கப்பட்டார்” என்று அவர் தெரிவித்தார்.