முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன்!

முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுயதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இக்கடன் வழங்கப்படவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் நாடாளுமன்ற மேற்பார்வை குழு இந்த விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளது.

இதன்படி, புனர்வாழ்வின் பின் சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான வழிமுறைகளும் வகுக்கப்படவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கட்டப் போரின்போது 12,000 விடுதலைப்புலிகள் இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் அவர்கள் அனைவரும் புனர்வாழ்வின் பின் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor