முகப்புத்தகம் பார்ப்போரின் மனோநிலையை மாற்றுகிறது

facebook_2_1முகப்புத்தகம் (பேஸ்புக்) எமது வாழ்வுபற்றி எம்மை மோசமாக சிந்திக்க வைக்கின்றது என அமெரிக்காவின் மிக்சிக்கன் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சமூக ஊடகத்தை எவ்வளவுக்கு பார்க்கின்றார்களோ அந்த அளவுக்கு அவர்களது மனோநிலை கணத்துக்கு கணம் இருண்டுபோவதாகவும் அந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

இவர்களின் வலையமைப்பு சிறிதாக இருந்தபோதும் இவ்விதமான பாதகமான விளைவுகள் கூட உண்டாவதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

முகப்புத்தகப் பாவனையாளர்கள் செய்யும் ஒவ்வொரு விருப்பும் (லைக்) அவர்களது மனோநிலையை தெளிவாக வெளிப்படுத்துகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த பேஸ்புக் மனித சிந்தனை ஆற்றலை மட்டுப்படுத்தி அவனை இருள் சூழ்ந்த மனோநிலைக்கு இட்டுச்செல்வதாகவும் தெரிய வந்துள்ளது.