மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலி. வடக்கு மக்கள், பா.உ மாவை.சேனாதிராசாவிடம் வேண்டுகோள்

வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த பலாலி மக்களை, நேற்று மாலை அச்சுவேலி பிள்ளையார் ஆலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சோ. சேனாதிராசா சந்தித்து கலந்துரையாடினார்.இச் சந்திப்பில் இராணுவம் விடுவிக்காத வலி. வடக்கு பகுதியில் மீண்டும் மண் அணை கட்டப்படுவதாகவும் அதனால் வீடுகள் காணிகள் சேதமடைவதாகும் மக்கள் முறையிட்டார்கள்.இதனை தடுத்தி நிறுத்தி தங்களை சொந்த இடங்களில் குடியேறுவதற்கு வழிவகை செய்த தருமாறு பாராளுமன்ற உறுப்பினரிடம் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.

இச்சந்திப்பில் வலி வடக்கு பிரதேசத் தலைவர் சோ.சுகிர்தனும் கலந்து கொண்டார்.

இதேவேளை, வடக்கிலிருந்து தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற இளைஞர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா நன்றி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்று திரும்பிய இளைஞர்களை நேற்று மாலை யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் சந்தித்த போதே அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இவ் நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சி.வி.கே.சிவஞானம், இலங்கைத் தமிழரசக் கட்சியின் யாழ் மாவட்டத் தலைவர் பெ.கனகசபாபதி, தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் பா.கஜதீபன் ஆகியோர் உரையாற்றினார்கள்.