நாட்டின் கடற்கரையின் பல பாகங்களில் எதிர்வரும் 24 மணி நேரத்திற்க்கு அலையின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்பதால் இது குறித்து அவதானமாகச் செயற்படுமாறு மீனவர்களையும், கடற்படையினரையும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது .
இன்று காலை 5.30 அளவில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்
ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரை யாழ்ப்பாணம் தொடக்கம் திருகோணமலை வரை மற்றும் மன்னார் வலைகுடா பகுதிகளில் அலையின் வேகம் அதிகரிக்கக் கூடும் என அவ்வறிக்கையில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50Km தொடக்கம் 60Km வரை காணப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.