மீண்டும் தீயணைப்பு வாகனம் சேவையில் (படங்கள் இணைப்பு)

அதிநவீன வசதிகள் கொண்ட தீயணைப்பு வாகனத்தை யாழ். மாநகரசபையின் தீயணைப்புப் படை சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டது.

50 மில்லியன் பெறுமதி வாய்ந்த 4000 லீற்றர் நீர்த்தாங்கி கொள்ளளவுடைய இவ் வாகனம் கடந்த மாதம் 29 ஆம் திகதி மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அதாவுல்லாவினால் அண்மையில் பதவிக்காலத்தை நிறைவு செய்து கொண்ட யாழ். மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசாவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

மாநகரசபை ஆணையாளர் தலைமையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த வாகனம் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது 5 நாள் தீயணைப்பு வீரர் பயிற்ச்சியை முடித்து சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 வீரர்களினால் தீயினை எவ்வாறு கட்டுப்படுத்துவது என செய்து காட்டப்பட்டது.

எனினும் யாழ். மாநாகர சபையின் தீயணைப்பு பிரிவு முன்னர் போதிய வசதிகள் இன்றி சேவையினை செவ்வனே வழங்க முடியாது இருந்தது. எனினும் தற்போது வசதிகள் ஓரளவு அதிகரிக்கப்பட்டதனையடுத்து 24 மணித்தியாலமும் சேவை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் உட்கட்டமைப்பு வசதிகளின் புனரமைப்புக்கென 5 மில்லியன் ரூபா மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அதாவுல்லாவினால் மாநகரசபை மேயரிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

fire-munincipal-1

fire-munincipal-2

fire-munincipal-3

fire-munincipal-4

fire-munincipal-5