மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் – மக்களுக்கு எச்சரிக்கை!

மக்களின் கவனயீனமான நடவடிக்கையினால் எதிர்காலத்தில் தேவையற்ற விதத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாகாண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலத்தில் பலர் சுற்றுலா சென்றுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களின் இவ்வாறான கவனயீனமான நடவடிக்கையால் எதிர்காலத்தில் கொரோனா தொற்றாளார்களின் எண்ணிக்கை அதிகரித்தால், கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தயவு செய்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor