மின் கட்டண உயர்வைக் கண்டித்து பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வைக் கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்களின் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்பாட்டத்திற்கு ஆதரவாக யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழக்தின் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர். இராசகுமாரன் தலைமையில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், விஞ்ஞான அலகுகள் சங்கம், யாழ்.பல்கலைக்கழக கல்விசார ஊழியர் சங்கம் என்பன இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்துள்ளன.
univer-jaf
இதன்போது ‘குப்பி விளக்கு புரட்சி ஆசியாவின் ஆச்சரியமா’,’அரசே உன் சுகபோக வாழ்விற்காக மக்களை இருட்டில் தள்ளாதே’, ‘மந்திரிகளோ குளு குளு அறையில் மக்களோ இருட்டறையில்’, ‘மின் கட்டண உயர்வு மகிந்த சிந்தனையா’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor