மாவையை நிறுத்தாவிடின் தீக்குளிப்பேன் -நிஷாந்தன்

nishantahn‘இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யாவிடின் தீக்குளிக்க தயங்கமாட்டேன்’ என யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘நீண்டகால அரசியல் அனுபவமும், ஆயுதம் தூக்காத மாறாத கொள்கையுடன் அகிம்சை பேராட்டத்தை நடத்திய அனுபவமும் தூரநோக்குச் சிந்தனை, செயல்திறன், பேச்சாற்றல், கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும்.

அவ்வாறு நிறுத்தாதவிடின் நான் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor