மாவீரர் தின நினைவேந்தலை நடத்துவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை!!

மாவீரர் தின நினைவேந்தலை நடத்துவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்கள் உயிரிழந்த தமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதை யாரும் தடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு வழமைபோல இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறானத் தடைகள் வந்தாலும் அந்தத் தடையை உடைத்து மக்கள் அனைவரும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்றுகூடி இந்த மாவீரர் தின நிகழ்வை வழமை போன்று நடத்துவோம் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.

மேலும் தன்னைக் கைது செய்தாலும்கூட மாவீரர் தின நிகழ்வை நடாத்துவோம் எனவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor