மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் துப்பரவுப்பணி

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் ஏற்பாட்டில் வலி. வடக்கிலுள்ள மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வளாகத்தை துப்பரவு செய்யும் பணி நேற்று வியாழக்கிழமை (31) முன்னெடுக்கப்பட்டது.

துப்பரவு செய்யும் பணியை வடமாகாண ஆளுநர், ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது கோவில் உட்புற வீதி, பூங்காத் தோட்டம் ஆகியவற்றில் துப்பரவாக்கப்பட்டன.

இந்தத் துப்பரவு பணியில் வடமாகாண ஆளுநர் அலுவலக ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

14790508104_735c8bf5dd

14789738011_9d30278a99

14789737771_cdfb1c5d57

14606229818_285ecb87c9

Recommended For You

About the Author: Editor