மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்சந்தை

Job_Logoமாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் தொழில் மற்றும் தொழில்துறை அமைச்சுடன் இணைந்து சமூக சேவை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்சந்தை இன்று வெள்ளிக்கிழமை யாழில் நடைபெற்றது.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமான இந்த தொழிற்சந்தையில் பிரதம அதிதியாக தொழில் மற்றும் தொழில்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேரத்யாப்பா கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இதில் வடமாகாணத்தில் உள்ள 30 இற்கும் மேற்பட்ட தொழில் வழங்குனர்கள் கலந்துகொண்டு மாற்றுத்திறனாகளுக்கான நேர்முகத்தேர்வினை நடத்தியுள்ளனர்.

யுத்தத்தினால் இயற்கையான பாதிப்புக்களுக்கும் முகம்கொடுத்துள்ள 160 இற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த தொழிற் சந்தையில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த தொழிற்சந்தை நிகழ்வில் வடமாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ், யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான தொழில் திணைக்கள ஆணையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor