மானிப்பாய் இளைஞன் இந்தியாவில் கைது

arrest_1இந்தியாவின் மதுரை நகரில் விசா காலாவதியான நிலையில் மேலதிகமாக தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஜெயவதனன் ( 30வயது) என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெயவதனன் 2008ம் ஆண்டு இந்தியாவின் மதுரை நகருக்கு சுற்றுலா விசாவில் சென்று அங்கு கணினி நிலையமொன்றில் தொழில் புரிந்துவந்துள்ளார்.

மூன்று மாத கால சுற்றுலா விசாவில் சென்று தொழில் புரிந்து வந்த இவர், விசா காலாவதியான பின்னரும் குடிவரவு திணைக்களத்திற்கு தெரியாமல் மதுரையில் தங்கிவந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த கியூ பிரிவு பொலிஸார் ஜெயவதனனை கைதுசெய்து மதுரை சிறையில் அடைத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor