மாதாந்த கட்டணம் செலுத்தாவிடின் உடனடியாகவே மின்சாரம் துண்டிப்பு

ceylon_electricity_boardமின்பாவனையாளர்களுக்கான மின் கட்டண நடவடிக்கைகள் இந்த வருடம் தொடக்கம் மேலும் இறுக்கமடைகிறது. சுன்னாகம் மின் பொறியியலாளர் ஞானகணேசன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

 

மின் பாவனையாளர் மின் கட்டணத்தை மாதாந்தம் செலுத்தத் தவறின் உடனடியாக மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படும். அதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
இந்த நடவடிக்கையை இந்த வருடம் ஆரம்பத்திலிருந்து நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
கடந்த காலங்களில் மின் கட்டணம் செலுத்தத் தவறினால் மின்சாரசபையால் சிவப்பு எச்சரிக்கை இறுதி அறிவித்தல் அனுப்பப்படுவது வழமை.
அதன் பின்னர் கட்டணம் செலுத்தத் தவறினால் மட்டுமே மின்துண்டிப்பை மேற்கொண்டு வந்தோம். இந்த வருடம் மின்கட்டணத்துக்கான நடைமுறைகள் மிகவும் இறுக்கமடையவுள்ளது.
இதற்காகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் பத்திரிகைகளிலும் விளம்பரங்களை வெளியிடவுள்ளோம். அத்துடன் வீடுகளில் மீற்றரில் மின்வாசிப்பு வாசிக்க செல்லும் மின் ஊழியர்களாலும் விழிப்புணர்வை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 3 மாதமாக  நிலுவையிலிருக்கும் மின்கட்டணத்தை இந்த வருடம் வசூலிக்கவுள்ளோம். இதற்கான நடவடிக்கைகளை மின்சாரசபை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.என்று மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor