மாதகல் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் நேற்று (31) காலை மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் அன்ரன் உதயராஜ் டிலக்சி என்ற 22 வயதான பெண்ணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று காலை குறித்த பெண்ணின் கணவர் மற்றும் பெற்றோர் ஆகியோர் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போதே குறித்த பெண் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts