Ad Widget

மஹிந்தவின் கடும் எதிர்ப்பையடுத்து விசாரணை ஒத்திவைப்பு!

பாரிய ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமிக்கப்படுவதற்கு அதிகாரமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்ததையடுத்து, அவர் மீதான நேற்றைய விசாரணை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் இன்றைய தினம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, பாரிய மோசடி, ஊழல், அரச வளங்கள் மற்றும் அதிகார சிறப்புரிமைகள் துஷ்பிரயோகம், ஆகியவற்றை விசாரணை செய்வதற்கும் ஆராய்வதற்குமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அதிகாரபூர்வமானதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும். அதுவரை ஆணைக்குழுவில் சகல செயற்பாடுகளும் இன்று காலை 9 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக ஆணைக்குழு நேற்று அறிவித்துள்ளது.

Related Posts