Ad Widget

மறுபிறப்படைந்த வடக்கில் வடக்கு வாழ் மக்கள் விருத்தியடைகிறார்கள்- வடமாகாண ஆளுநர்.

GA Chandrasiriவட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்கள் டெய்லிநீயூஸ் ஆங்கிலப்பத்திரகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டதாவது வடக்கில் மாற்றங்களை ஏற்படுத்தி வீசிக்கொண்டிருக்கும் காற்றானது வடக்கில் வாழும் மக்களுக்கு செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களாக புலிப்படையினரின் சாபக்கேட்டினால் சொல்லொண்ணாத் துயரை அனுபவித்த மக்கள் தற்போது சுபீட்ஷத்தை நோக்கிப் பயணிக்கிறார்கள். தற்போதைய ஆக்க பூர்வமான அபிவிருத்தி நடவடிக்கைகளைப்பற்றி குறிப்பிடும்போது எதிலும் எவ்விடத்திலும் மகிந்த சிந்தனை மூலம் ஏற்படுத்தப்படும் சமூக பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவேற்றியுள்ளமை காணக்கூடியதாக இருக்கின்றது என்று அவர் மேலும் கூறினார்.

முன்னர் நாம் கேட்டுக்கொண்டிருந்த ஷெல் மற்றும் பீரங்கி வெடிச்சத்தங்களுக்கு பதிலாக ,இப்போது பல்வேறு இடங்களில் மாடிக்கட்ட்டத்தொகுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ் அபிவிருத்தி திட்டங்கட்கு அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவையும் வீதி அபிவிருத்தி செய்வதற்காக மேலும் 5 பில்லியன் ரூபாவையும், வீதி அபிவிருத்தி சபையும் ஒதிக்கியுள்ளது.

NEHRP இன் கீழ் வடகிழக்கு மாகாணங்களில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடனும் ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களினதும் உதவியுடனும் 35000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன , புலம் பெயர்ந்துள்ள தமிழரும் இதற்கு உதவியுள்ளார்கள் என்பது விசேடமாக குறிப்பிடப்பட வேண்டும் இது ஒரு நல்ல திருப்பு முனை என்று கூறலாம்.

யாழ்பாண மக்களின் விசேட வாழ்வாதாரம் விவசாயமாகும். இதில் அவர்கட்கு நல்ல ஈடுபாடு உண்டு. அரசாங்கத்தினது அபிவிருத்தி நடவடிக்கைகளில் தனியார் துறை நிறைய நம்பிக்கை கொண்டுள்ளது.

இதற்கு உதாரணமாக கூறப்போனால், தற்பொழுது யாழ்பாணத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் 5 மாடி பல்வாணிப தொகுதி கட்டடத்தை குப்பிடலாம்.

இது கமக்காரர்கட்கும் விவசாயிகளுக்கும் தமது உற்பத்தி பொருட்களை தரகர்ள்ளைத் தவிர்த்து நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்குரிய வாய்ப்பை அளிக்குமென நம்பலாம்.

யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளின் கடுமையான சட்ட திட்டங்களுக்கு அடிபணிந்து இருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இப்போது புதிய யுகத்தில் பிரவேசித்துள்ளது.உதாரணமாகக் கூறின் தென்னிலங்கையைச்சேர்ந்த 75 மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மூலம் மருத்துவத் துறையில் தமது யாழ்பாண சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து, உயர்கல்வி பயிலுகிறார்கள். இவ்வாறு ஆளுநர் அவர்கள் தெரிவித்தார்கள்.

புதிதாக வசதிபடைத்த குடும்பத்தினர் வெளிநாடுகட்கு கல்வி கற்பதற்காக தமது பிள்ளைகளை அனுப்புகிறார்கள், ஆகவே தமிழ் நாட்டில் ஜெயலலிதாவும் அவரது குழுவினரும் தவறாக கூறுவதுபோல யாழ்ப்பாண தமிழ் மக்கள் அடக்கு முறைக்கு ஆளாகியுள்ளார்கள் என்று குறிப்பிட இயலாது. விடுதலைப்புலிகளின் பயங்கரமான ஆட்சிக்காலத்தில் அவர்கள் மக்கள் விவாகம் செய்வதற்கும் கட்டுப்பாடு விதித்திருந்தார்கள் அதாவது குடும்பத்தில் ஒரு பிள்ளைக்கு விவாகம் மேற்கொள்வதாக இருந்தால் விடுதலைபுலிகள் இயக்கத்திற்கு இன்னொரு பிள்ளையை கையளிக்க வேண்டும். அப்படியான நிலைமை இருந்தது.

முன்னெப்போதும் கண்டிராத அபிவிருத்தி திட்டங்களினால் தமிழ் ஈழக்கனவு நனவாகப் போய்விட்டதோடு மட்டுமல்லாமல், இவை சாதாரண மக்களுக்கு நிறைய நன்மைகளை அளித்துள்ளன. மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பணிப்பின் பேரில் புது யுகத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கும் அரசாங்கம் மக்களுடைய நெடுநாளைய அபிலாஷைகளையும் கனவுகளையும் நிஜமாக அடைவதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் ஆளுநர் மேலும் கூறினார்

Related Posts