மர்மப்பொருள் வெடித்தலில் ஒருவர் காயம்

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவான், மயிலங்காடு பகுதியில் மர்மப் பொருளொன்று வெடித்ததில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த பகுதியில் தோட்ட வேளையில் ஈடுபட்டிருந்த 48 வயதான குடும்பஸ்தர் ஒருவரின் மண்வெட்டியில் அடிபட்டே இந்த மர்மப் பொருள் வெடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.