மருந்து பொருட்களை கோரி வவுனியாவில் போராட்டம்!

மருந்து பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியம் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றையும் ஏற்பாடு செய்திருந்தது.

வவுனியா குருமண்காடு சந்தியில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் இலங்கை அரசே அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்க உடனடியாக வழிவகை செய் என்ற பாதையை தாங்கியிருந்தனர். குறித்த போராட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது.