மன்னாரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

மன்னார் மாவட்டத்தில் மத ஸ்தாபனம் ஒன்றில் பணி புரியும் வெளி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.

நேற்றைய தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மத ஸ்தாபனம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு,குறித்த நபரை உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்ப மன்னார் மாவட்ட பிரந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

மன்னார் மக்கள் காரணம் இன்றி வெளியில் நடமாடுவதை தவிர்பதுடன் சமூக இடைவெளி மற்றும் முக கவசங்களை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்படுள்ளது.

Recommended For You

About the Author: Editor