மன்னாரில் இராணுவக் கெடுபிடி!

மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தினரின் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜரோப்பிய ஒன்றியம் புலிகள்மீதான தடையை நீக்கியுள்ள நிலையில் இலங்கையில் புலிகள் மீள அணிதிரள வாய்ப்பிருப்பதாக இராணுவத்தரப்பு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவப் பாதுபாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. இந்தநிலையில் மன்னார் மாவட்டத்தில் இராணுவ ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக இரவு வேளைகளில் இரணுவம் ரோந்து நடவடிக்கையிலிடுபடுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.