மத விவகாரங்கள் தொடர்பில் நீங்களும் முறைப்பாடு செய்யலாம்!

Call-telephoneமத விவகாரங்கள் தொடர்பில் ஆராயும் விசேட பொலிஸ் குழு ஒன்று நேற்று நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின்படி இவ் விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டது.

மத விவகாரங்கள் அமைச்சின் கீழ் இந்த பொலிஸ் குழு செயற்படவுள்ளது.

இந்நிலையில் மத விவகாரங்கள் தொடர்பில் 011 2307674, 011 2307694 என்ற தொலைபேசி இலக்கங்கள் மற்றும் 011 2307688 என்ற தொலை நகல் இலக்கம் மூலமாக முறைப்பாடு செய்ய முடியும்.

Related Posts