மது போதையில் விமாணத்தில் கழிவறைக்கதவு என பிரதாண கதவை திறக்க முயன்ற இலங்கை கிரிக்கெட் வீரர்

sri-lanka-cricket-logoஇலங்கையின் கிரிக்கெட் வீரர் ஒருவர் பயணிகள் விமானத்தில் நடந்துக்கொண்ட முறையால் விமான பயணிகள் மத்தியில் பதற்றநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய பின்னர் சென் லூசியாவில் இருந்து கேட்விக்குக்கு செல்லும் போதே பிரிட்டிஸ் எயார்வேய்ஸ் விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கிரிக்கெட் வீரர், கழிவறைக்கு செல்வதாக கூறி, சென்ற போதும் பின்னர் விமானத்தின் வெளியேறும் கதவை திறக்க முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுநிசியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுமார் 200 பயணிகள் விமானத்தில் இருந்தனர்.

இலங்கை கிரிக்கெட் வீரரின் இந்த செயலை அடுத்து, ஏனைய வீரர்கள் அவரை சத்தமிட்டதுடன் அவரை அழைத்து வந்து இருக்கையில் அமர்த்தினர்.

குறித்த வீரர் மதுபோதையில் கழிவறைக்கு பதிலாகவே விமானத்தில் பயணிகள் வெளியேறும் கதவை திறக்க முற்பட்டதாக விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் குறித்த வீரரின் பெயரை வெளியிட மறுத்துவிட்டனர்.

Recommended For You

About the Author: Editor