மதுபோதையில் வாகனம் செலுத்தியோர் கைது

arrest_1சுன்னாகம் பொலிஸ் பிரிவினுள் இரவு வேளையில் மது போதையில் வாகனம் செலுத்திய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் பொலிஸார் கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்ட வீதிச் சோதனையின்போது மேற்படி ஒன்பது பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரவு வேளைகளில் இடம்பெறும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸார் தற்போது இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.